இந்தியாவுக்கு எதிரானப் போட்டி... 'திட்டம் தீட்டிய பாகிஸ்தான் கேப்டன்'.. 'விளாசிதள்ளிய முன்னாள் பிரபல வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 07, 2019 08:07 PM
இந்திய வீரர்களுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் வீரர்கள் செயல்படக் கூடாது என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ படை வீரர்களுக்கு மரியாதை செய்யும் வகையில், மார்ச் மாதம் ராஞ்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்தனர். மேலும், உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில், ராணுவ முத்திரை கொண்ட விக்கெட் கீப்பிங் கிளவுசை தோனி பயன்படுத்தியதால் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் 20-வது போட்டி, வரும் 16-ம் தேதி மான்செஸ்டரில் நடக்கிறது. அப்போது, இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விக்கெட்டுகளை கைப்பற்றும் போது, அதை வித்தியாசமாக கொண்டாட கேப்டன் சர்ப்ராஜ் அஹமது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இடம் அனுமதி கேட்டதாக தெரிகிறது. ஆனால் இந்த கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மறுத்துவிட்டதாக தெரிகிறது.
மேலும் அந்நாட்டு பிரதமரான இம்ரான்கான், தனது நாட்டு அணியினரை கண்டித்துள்ளார். விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும், விளையாட்டில் அரசியலை புகுத்த வேண்டாம் என்றும் அவர் பாகிஸ்தான் வீரர்களை கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய வீரர்களை போன்ற எந்தவித செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் பிரதமர் இம்ரான்கான் பாகிஸ்தான் வீரர்களை வலியுறுத்தியுள்ளார்.
