'என்னடா இது போங்கு ஆட்டமால இருக்கு'... 'இப்டிகூட அவுட் பண்ணலாமா?'... அம்பயரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 07, 2019 09:42 AM

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரில், அம்பயரின் முடிவுகள் படுமோசமாக அமைந்ததால் வெஸ்ட் இண்டீஸ் போராட்டம் வீணானது.

west indies Chris Gayle robbed in no ball controversy

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நாட்டிங்ஹாமில் நடந்த 10-வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி, வெஸ்ட் விண்டீஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  இதில் வெஸ்ட் விண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலுக்கு இரண்டு முறை அடுத்ததடுத்த பந்தில் அம்பயர் அவுட் கொடுத்தார். இதை இரண்டு முறையும் கிறிஸ் கெயில் ரிவியூ செய்ய, ரீப்ளேவில் அவுட் இல்லை என தெரிந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் வீசிய போட்டியின் 5-வது ஓவரில், 5-வது பந்தில் கெயிலுக்கு அம்பயர் எல்பிடபிள்யு முறையில் அவுட் கொடுத்தார். ஆனால் இதற்கு முதல் பந்தை (4வது பந்தை) ஸ்டார்க், மிகப்பெரிய ‘நோ-பாலாக’ வீசினார். ஆனால் இதை அம்பயர் கவனிக்க தவறினார். புது கிரிக்கெட் விதியின் படி ஒரு பந்தை பவுலர் ‘நோ -பாலாக’ வீசினால், அடுத்த பந்து ஃப்ரி ஹிட்டாக அறிவிக்கப்படும். அதில் பேட்ஸ்மேன் ரன் அவுட் தவிர, வேறு எப்படி அவுட்டானாலும் , அவுட் இல்லை.

இப்போட்டியில் ஒரு முறை இரு முறை அல்ல, கிட்டத்தட்ட ஐந்து முறைக்கு மேல் அம்பயர் முடிவு தவறாக அமைந்தது. பல தொழில்நுட்பங்களுடன் நாளுக்கு நாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டாலும், களத்தில் உள்ள அம்பயரின் தவறு தொடர்ந்து வண்ணம் உள்ளது. இப்போட்டியில் 21 ரன்கள் எடுத்த வெஸ்ட் விண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் உலகக்கோப்பை அரங்கில் 1000 ரன்கள் என்ற புது மைல்கல்லை எட்டினார்.