'தோனியின் க்ளவுஸ்க்கு ஐசிசி தடையா?'... அதிர்ந்த 'தல' ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 06, 2019 10:06 PM

இந்திய அணி வீரர் தோனி ராணுவ முத்திரை கொண்ட கிளவுஸ் அணியக் கூடாது என ஐசிசி கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ICC demands Indian Army insignia to be removed from Dhoni’s gloves

உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் கடந்த புதன்கிழமையன்று மோதின. இதில் தோனி அணிந்து இருந்த விக்கெட் கீப்பிங் கிளவுஸில் இந்திய ராணுவத்தின் 'பாலிடான் முத்திரை' இடம் பெற்று இருந்தது. அதைப் பார்த்த தோனியின் ரசிகர்கள் சிலர், அதில் இடம் பெற்று இருந்த வித்தியாசமான முத்திரை ராணுவத்தை சேர்ந்தது என கண்டுபிடித்தனர். பின்னர் அனைவராலும் பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

பாராமிலிட்டரி பிரிவை சேர்ந்த பாலிடான் முத்திரை என்ற தகவலும் வெளியானது. தோனி பாராஷூட் பிரிவின் கௌரவ லெப்டினன்ட் கலோனல் பதவியில் கடந்த 2011-ல் நியமிக்கப்பட்டார். 2015-ல் அதற்கான பயிற்சிகளிலும் கூட ஈடுபட்டுள்ளார் தோனி.  இதையெல்லாம் கண்டுபிடித்த தோனி ரசிகர்கள், தோனியின் தேசப்பற்று எப்படிப்பட்டது என புகழ்ந்து தள்ளி வந்தார்கள்.

இந்நிலையில் ஐசிசி, பிசிசிஐக்கு வீரர்கள் யாரும் ராணுவ முத்திரை அணியக் கூடாது என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐசிசி விதிகளின்படி சர்வதேசப் போட்டியில் எந்தவித கருத்துக்களையும் பரிமாறும் வகையில் உடைகள் இருக்கக் கூடாது என்பதால், இதனை தடை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், தோனி அடுத்து வரும் போட்டிகளில்  ராணுவ முத்திரை பதிக்கப்பட்ட கிளவுஸ் ஏதும் அணிய மாட்டார் என்றே தெரிகிறது.