‘நீங்களே இப்படி பண்ணலாமா..?’ விராட் கோலிக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jun 07, 2019 05:45 PM
உலகக் கோப்பை போட்டிகளுக்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ள நிலையில் கேப்டன் விராட் கோலியின் வீட்டில் குடிக்கும் தண்ணீரை வீணாக்கியதற்காக அவருக்கு அபராதம் விதித்துள்ளனர் அதிகாரிகள்.
குருகிராமில் உள்ள விராட் கோலியின் வீட்டில் தண்ணீர் வீணடிக்கப்படுவதாக அருகில் வசிப்பவர்கள் புகார் அளித்துள்ளனர். அதில், “விராட் கோலியிடம் உள்ள இரண்டு எஸ்யூவி கார் உட்பட ஆறு கார்களை கழுவுவதற்கு குடிக்கும் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள். அவருடைய வேலையாட்கள் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிக்கும் தண்ணீரை இதற்காக வீணாக்குகிறார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல இடங்களிலும் தண்ணீர்ப் பற்றாக்குறையால் குடிக்கவே தண்ணீர் இல்லாமல் உள்ள நிலையில் காரைக் கழுவுவதற்கு குடிநீரைப் பயன்படுத்தியதற்காக கோலிக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. குருகிராம் வீட்டுடன் சேர்த்து அவருடைய மற்ற 10 வீடுகளுக்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டையும் தனித்தனியாக பார்வையிட்ட அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் குடிநீர் வீணாக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர்.