‘கெடச்ச ஒரு சான்ஸ்யையும் மிஸ் பண்ணிடீங்க ’.. ஆரம்பத்திலேயே பாகிஸ்தானுக்கு ஆட்டம் காட்டிய இந்தியா!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 16, 2019 05:21 PM
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலக்கோப்பை லீக் போட்டி இன்று(16.06.2019) மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கியுள்ளனர். ஷிகர் தவான் காயம் காரணமாக விலகியிருப்பதால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ளார்.
இன்றைய போட்டியில் இந்திய அணியில் தமிழக வீரரான விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். தவானுக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவதால், 4 -வது ஆர்டரில் விஜய் சங்கர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தவானுக்கு பதிலாக அணியில் புதிதாக இடம்பெற்ற ரிஷப் பண்ட் இப்போட்டியில் இடம்பெறவில்லை.
இப்போட்டியின் முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காத இந்திய அணி, அடுத்தடுத்த ஓவர்களில் அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மாவும், கே.எல்.ராகுல் அரைசதத்தை கடந்து அசத்தினர். இப்போட்டியின் 10 -வது ஓவரின் போது ராகுல் ரன் அவுட்டில் இருந்து தப்பினார். ஆனாலும் 57 ரன்கள் எடுத்திருந்தபோது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ரியாஸின் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளார்.
Once again 😂😂😂😂#INDvPAK pic.twitter.com/QTEuIHMZq7
— Cricket Freak (@Jammy_Cricket11) June 16, 2019
