அடங்கப்பா என்னா ஷாட்..! கோலியே மிரண்டு போன ‘தல’யின் வேறலெவல் சிக்ஸர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 09, 2019 08:55 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோனி அடித்த சிக்ஸரை பார்த்து வியந்த விராட் கோலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகக்கோப்பை லீக் சுற்றின் 14 -வது போட்டி இன்று(09.06.2019) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர்.
இதில் ரோஹித் ஷர்மா 57 ரன்கள் எடுத்திருந்த போது ஆஸ்திரேலிய வீரர் கூல்டர் நைல் ஓவரில் அவுட்டாகினார். இதனை அடுத்து களமிறங்கிய விராட் கோலி மற்றும் தவான் கூட்டணி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. இப்போட்டியில் தவான்(117) சதம் அடுத்து அசத்தினார். இதனை அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி 48 ரன்களில் அவுட்டானார்.
இதனை அடுத்து களமிறங்கிய தோனி, 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடுத்து 27 ரன்களில் அவுட்டாகினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 82 ரன்களில் அவுட்டாகி வெளியேற, 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்களை இந்திய அணி எடுத்தது.
Reaction is priceless as it was a massive hit by Dhoni #DhoniKeSaathDesh #MSDhoni #ViratKohli pic.twitter.com/7r6YfZGWHx
— Aaj Ka Gyan (@aajkagyan) June 9, 2019
