‘இப்பவே இப்டினா நாளைக்கு சொல்லவா வேணும்’.. ஸ்டேடியத்தை தாண்டிய ‘தல’யின் வைரல் ஷாட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 04, 2019 05:19 PM

தோனி பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

WATCH: MS Dhoni\'s brilliant hit during the practice session

உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியை தென் ஆப்பிரிக்கா அணியுடன் விளையாட உள்ளது. நாளை சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற உள்ள இப்போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்கா தான் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் இந்தியா உடனான போட்டியியை வெல்ல தென் ஆப்பிரிக்கா முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் வேகப்பந்து வீச்சாளர்களான லுங்கி நிகிடி மற்றும் டேல் ஸ்டெய்ன் போன்ற வீரர்கள் காயம் காரணமாக விலகியிருப்பது தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

மேலும் இந்திய வேகப்பந்து வீச்சாளரான பும்ரா பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த போது ஊக்கமருந்து பரிசோதனை நடத்தபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என இந்திய வீரர்கள் முனைப்பு காட்டிவரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்றை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #MSDHONI #BCCI #TEAMINDIA