'இந்திய ரசிகர்கள் சில்லித்தனமானவங்க'... 'என்ன இவரு பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 03, 2019 07:33 PM
இந்திய ரசிகர்களின் செயல்பாடு சில நேரத்தில் சில்லித்தனமாக இருக்கும் என வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியா டுடேவுக்கு அளித்தப் பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த 2017-ல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதனால் ஆத்திரமடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்களின் உருவ பொம்மையை எரித்தனர். தொலைக்காட்சி பெட்டிகளை வீதியில் போட்டு உடைத்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதேப்போல கடந்த 2003-ல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வீரர்களின் வீடுகள் தாக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வரும் வியாழக்கிழமையன்று, தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதனால் இம்முறை உலகக்கோப்பை தொடரின்போது இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் தனிப்பட்ட ஒருவருக்கு நாம் மரியாதை தரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து விவ் ரிச்சர்ட்ஸ் கூறுகையில், ‘இந்திய ரசிகர்கள் சில நேரம் தங்களின் பொறுமையை இழந்து விடுகின்றனர். உருவ மொம்மை எரிப்பு, கல் வீச்சு என சில்லித்தனமாக நடந்து கொள்கின்றனர். உங்கள் அணி வீரர்கள் இங்கு தோற்க வேண்டும் என வரவில்லை. வெற்றி பெற வேண்டும் என்று தான் வருகின்றனர். இன்று ஹீரோவாக உள்ளவர் நாளை ஜீரோவாக போவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.