‘இவ்ளோ கஷ்டப்பட்டும் வேஸ்ட் ஆகிடுச்சே போல்ட்’.. ஸ்டெம்பில் பந்து பட்டும் அவுட் ஆகாத இலங்கை கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 02, 2019 12:03 AM

நியூஸிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பைத் தொடரில் இலங்கை படுதோல்வி அடைந்துள்ளது.

WATCH: Karunaratne not out, Even after ball hits stumps

உலகக்கோப்பை லீக் சுற்றின் மூன்றாவது போட்டி இன்று காட்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூஸிலாந்து மற்றும் இலங்கை மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 29.2 ஓவர்களில் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதல் அதிகபட்சமாக இலங்கை அணியின் கேப்டன் திமுத் குருனாத்தே 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 16.1 ஓவர்களின் முடிவில் விக்கெட் ஏதும் இழக்காமல் 137 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதில் மார்டின் குப்தில் 73 ரன்களும், கொலின் முன்ரோ 58 ரன்களும் எடுத்தனர்.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6 -வது ஓவரை நியூஸிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் வீசினார். அப்போது அந்த ஓவரின் 4 -வது பந்தை வீசிய போது பந்து ஸ்டெம்பில் பட்டும் பெய்ல் கீழே விழவில்லை. இதனால் பேட்டிங் செய்த இலங்கை கேப்டன் திமுத் குருனாத்தே அவுட்டில் இருந்து தப்பினார். இதுபோல் நடப்பது உலகக்கோப்பைத் தொடரில் இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான போட்டியின் போது தென் ஆப்பிரிக்க வீரர் டி காக்கிற்கு இதேபோல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #NZVSL