‘கோலி இப்டி செய்வார்னு நான் எதிர்பார்க்கவே இல்ல’.. கோலி குறித்து காட்டமாக கூறிய ரபாடா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 01, 2019 08:11 PM

தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து காட்டமான கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

Virat Kohli is immature, can\'t take abuse, Says Rabada

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான ரபாடா, உலகக்கோப்பைத் தொடரில் அந்த அணியின் சார்பாக விளையாடி வருகிறார். நடந்து முடிந்த இங்கிலாந்து எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோல்வியைத் தழுவியது. ஆனாலும் அதில் ரபாடாவின் பந்து வீச்சு சிறப்பாகவே அமைந்திருந்தது.

மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சார்பாக விளையாடி இருந்தார். இவர் காயம் காரணமாக நாடும் திரும்பும் வரை, இந்த வருட ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்திலேயே இருந்தார். இதனை அடுத்து சென்னை அணியில் விளையாடிய இம்ரான் தாகீர் அதை முறியடித்தார். இவரும் தென் ஆப்பிரிக்க வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடிய போது விராட் கோலி செய்த செயல் குறித்து ரபாடா காட்டமாக கூறியுள்ளார். அதில்,‘நான் போட்டியில் விளையாடுவது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன். விராட் கோலி நான் வீசிய பந்தை பவுண்டரிக்கு அடித்துவிட்டு கோபமாக சில வார்த்தைகள் பேசினார். இவரிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. விராட் கோலி சிறந்த வீரராக இருக்கலாம். ஆனால் இன்னும் அவர் நிறைய பக்குவப்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.