'ஆரஞ்சு நிற உடையில் களமிறங்கும் இந்திய அணி'!... 'என்ன ஸ்பெஷல்?'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 04, 2019 09:35 AM
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இதுவரை நீல நிற உடை அணிந்து விளையாடி வந்த நிலையில், இந்த உலகக் கோப்பையில் சில அணிகளுடன் மட்டும் ஆரஞ்சு நிறத்தில் உடை அணிந்து இனி விளையாடப் போகிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணி, நாளை விளையாட உள்ள தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்திய அணி போட்டிக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த முறை இரு அணிகளும் ஒரே சீருடையில் விளையாட ஐசிசி அனுமதி மறுத்துள்ளது. அதற்கு பதில் மாற்று நிற சீருடையை தயாராக வைத்திருக்க உத்தரவிட்டுள்ளது. என்ன நிறம் என்பதை அந்த நாடுகளே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
இதன்படி இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் நீல நிற உடையில் விளையாடி வந்தன. இனி இந்திய அணி இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுடன் விளையாடும் போது மாற்று உடையில் விளையாட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்திய அணி ஆரஞ்சு நிற உடையில் விளையாட முடிவு செய்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் பச்சை நிற உடை அணிந்து விளையாடி வரும் நிலையில், தென் ஆப்பிரிக்கா, வங்கசேம் அணிகள் மட்டும் வேறு உடை அணிந்து விளையாட உள்ளன. இந்திய அணி வரும் 22-ம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் 30-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆரஞ்சு நிற ஜெர்சியில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் ஜூலை 6-ம் தேதி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வழக்கமான நீல நிற ஜெர்சி அணிந்து பங்கேற்கும். அப்போட்டியில் இலங்கை அணி மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து போட்டியில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
