தென் ஆப்பிரிக்க முக்கிய வீரர் திடீர் விலகல்..! இந்தியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 03, 2019 06:12 PM

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

World Cup 2019: Lungi Ngidi ruled out of South Africa vs India match

உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான லீக் சுற்று நாளை மறுநாள்(05.09.2019) நடைபெற உள்ளது. இதுவரை விளையாடிய போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா இரண்டு தோல்விகள் அடைந்துள்ளது. முதல் போட்டியான இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.

இதனை அடுத்து நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும் என தென் ஆப்பிரிக்கா முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் போது தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடிக்கு காயம் ஏற்பட்டது. இதனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பயிற்சியில் ஈடுப்பட்ட போது காயாம் ஏற்பட்டது. இதனால் உலகக்கோப்பையின் முதல் லீக் சுற்றில் விராட் கோலி விளையாடுவதும் சந்தேகமாகியுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #INDVSA #INJURY #NGIDI