பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரருக்கு திடீர் ஊக்கமருந்து பரிசோதனை..! அதிர்ச்சியில் இந்திய அணி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 04, 2019 10:34 AM

இந்திய வேகப்பந்து  வீச்சாளர் பும்ராவுக்கு ஊக்கமருந்து பரிசோதனை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

World Cup 2019: Jasprit Bumrah undergoes doping test

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக்கோப்பைத் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுவருகிறது. உலகக்கோப்பை லீக் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. நாளை(05.06.2019) சவுதாம்டனில் நடைபெறவுள்ள இப்போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தென் ஆப்பிரிக்க அணி, இதுவரை விளையாடிய போட்டியில் தோல்வியை சந்தித்திருப்பதால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த பும்ராவை ஊக்கமருந்து தடுப்பு பிரிவினர் திடீரென அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவருக்கு சிறுநீர் பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பரிசோதனை தொடர்பான முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை. நாளை உலகக்கோப்பை போட்டியில் இந்தியா விளையாட உள்ள நிலையில் பும்ராவுக்கு ஊக்கமருந்து பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #BCCI #BUMRAH #TEAMINDIA #CWC19 #SAVIND