‘டீம் இந்தியாவின் ஃபன் டே அவுட்..’ பெயின்ட் பால் விளையாடிய விராட் கோலி மற்றும் வீரர்கள்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 01, 2019 01:30 PM

உலகக் கோப்பையில் தனது முதல் போட்டிக்குத் தயாராகி வரும் இந்திய அணி ஜூன் 4ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட இருக்கிறது.

Team Indias fun day out in the woods

உலகக் கோப்பை போட்டிகளுக்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்திய அணி வீரர்கள். பயிற்சிகளுக்கு இடையே விராட் கோலி மற்றும்  அணியினர் வெள்ளிக்கிழமை ஒரு நாள் ஓய்வுக்காக வெளியில் சென்றுள்ளனர்.  விராட் கோலி, எம்.எஸ்.தோனி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஜஸ்ப்ரிட் பும்ரா, குல்தீப் யாதவ், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அடங்கிய அணி சவுதாம்டனில் பெயிண்ட் பால் விளையாட்டிற்கு சென்றுள்ளனர். 

அப்போது எடுத்த புகைப்படத்தை விராட் கோலி, ஷிகர் தவான் இருவரும் டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர். அணி வீரர்கள் மிகவும் உற்சாகத்துடன்  இருக்கும் அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற உலகக் கோப்பை முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடந்தது இந்தியா. அதன்பின் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA