‘இப்படி தோற்பதற்கு வெட்கப்பட வேண்டும்..’ இலங்கை அணியை விளாசிய பிரபல வீரர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 04, 2019 05:11 PM

ஒரு தோல்வியிலிருந்து இன்னொரு தோல்வி என பாடம் எதையும் கற்றுக் கொள்ளாமல் இலங்கை சென்று கொண்டிருப்பதாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா தெரிவித்துள்ளார்.

Lasith Malinga wants Sri Lankan team to feel the shame of loosing

நேற்று இலங்கை செய்தியாளர்களைச் சந்தித்த மலிங்கா, “கடந்த இரண்டு ஆண்டுகளாக தோற்க வேண்டியது பிறகு தோல்வியை மறப்போம் அடுத்த போட்டியில் நன்றாக விளையாடுவோம் என்போம் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. இப்படி கிரிக்கெட்டை விளையாட முடியாது. நான் 4 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளேன். இருந்தும்  எனக்கு ஆப்கான் அணிக்கு எதிரான போட்டி குறித்து பயம் இருக்கிறது. இந்த பயம், பதற்றம் இல்லாத வீரர்களால் 100 சதவிகித பங்களிப்பை வழங்க முடியாது. செய்த தவறுகளையே திரும்ப செய்தால் எப்படி? இனியாவது பயத்துடன் விளையாடுவார்கள் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இலங்கை அணி கடைசியாக நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய ஆட்டத்தில் 30 ஓவர்களில் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இன்று ஆப்கானிஸ்தானை எதிர்த்து இலங்கை விளையாடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #SRILANKA