‘தொப்பையுடன் நகரக் கூட முடியாத கேப்டன்..’ பாக். கேப்டனை விளாசிய முன்னாள் வீரர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 01, 2019 04:35 PM

உலகக் கோப்பை போட்டியில் மே.இ.தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாக தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியையும், கேப்டன் சர்பிராஸ் அகமதுவையும் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

shoaib akhtar slams pak captain sarfaraz ahamed for his poor fitness

இந்தப் போட்டிக்குப் பிறகு, “நான் பேச்சற்று இருக்கிறேன்” என அந்த நாட்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் டிவீட் செய்துள்ளார். மற்றொரு டிவீட்டில், “இந்தப் போட்டி முடிந்துவிட்டது. வீரர்களைக் குறை சொல்லாமல் நம் நாட்டுக்காக விளையாடும் இவர்களுக்கு உலகக் கோப்பை முழுவதும் ஆதரவு அளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற அக்தர், “சர்பிராஸ் அகமது டாஸ் போட வந்த போது தொப்பையுடன் இருந்தார். அவர் முகம் குண்டாக இருக்கிறது. நான் இதுவரை பார்த்ததில் உடல் தகுதி இல்லாத முதல் கேப்டன் அவர்தான். சர்பிராஸால் அங்கும் இங்கும் நகரக் கூட முடியாது. அவர் விக்கெட் கீப்பிங்கிலும் தடுமாறி வருகிறார்” எனக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #PAKVSWI #SARFARAZAHMED