‘இவரு கிரிக்கெட் ப்ளேயருக்கே டஃப் கொடுப்பாரு போல’.. ‘மைதானத்தில் மாஸ் காட்டிய கேமராமேன்’.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 04, 2019 01:21 PM

உலகக்கோப்பை தொடரில் கேமராமேன் ஒற்றைக்கையால் கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Photographer catches ball with one hand during SA and BAN match

தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் சுற்றின் 5 -வது போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த வங்க தேச அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக முஸ்பிகூர் ரஹிம் 78 ரன்களும், சாஹிப் அல் ஹசன் 75 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 309 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியைத் தழுவியது.

இப்போட்டியில் வங்தேச வீரர் மொசாடெக் ஹொசைன் ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் டு பிளிஸிஸ் சிக்சர் ஒன்றை அடித்தார். இதை கேமராமேன் ஒருவர் தன் இருக்கையில் இருந்தபடியே கேட்ச் பிடித்து அசத்தினார். ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.