உலகக்கோப்பை முதல் போட்டியில் இந்திய வீரர் விளையாடுவது சந்தேகம்..! அவருக்கு பதில் விளையாடும் மற்றொரு வீரர்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 03, 2019 02:45 PM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வீரர் கேதர் ஜாதவ் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

Kedar Jadhav doubt for India\'s opening game against South Africa

உலகக்கோப்பை லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்றைய 6 -வது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதனை அடுத்து வரும் வியாழக்கிழமை(05.06.2019) இந்தியா தனது முதல் லீக் சுற்றில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்களுக்கு இடையேயான ஐபிஎல் தொடரின் போது கேதர் ஜாதவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அப்போது ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். மேலும் உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவது குறித்தும் கேள்வி எழுந்தது.

இதனிடையே காயத்தில் இருந்து மீண்ட கேதர் ஜாதவ் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியுடன் இங்கிலாந்து புறப்பட்டார். ஆனாலும் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடந்த பயிற்சி ஆட்டத்தில் கேதர் ஜாதவ் விளையாடவில்லை. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் கேதர் ஜாதவ் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பயிற்சியில் ஈடுபட்டபோது காயமடைந்துள்ளார். அதனால் விராட் கோலிக்கு பதிலாக கே.எல்.ராகுல் மற்றும் கேதர் ஜாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் களமிறங்க வாய்ப்பு உள்ளது. எனினும் இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #VIRATKOHLI #BCCI #KEDARJADHAV