போட்டியின் இடையில் ‘இந்திய வீரர் செய்த காரியம்’.. ‘தவறை ஒப்புக்கொண்டதால்..’ ஐசிசி எடுத்துள்ள நடவடிக்கை..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Aug 05, 2019 03:47 PM

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

INDvsWI Navdeep Saini found guilty of breaching code of conduct

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும் டி20 வரலாற்றில் கடைசி ஓவரை மெய்டனாக வீசிய 2வது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் போட்டியின் போது 4வது ஓவரில் நிகோலஸ் பூரன் விக்கெட்டை வீழ்த்திய சைனி அவரை வழியனுப்பும்போது ஆக்ரோஷமாக செய்கை செய்ததாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஐசிசி விதிகளின் படி எதிரணி வீரரை வெறுப்பேற்றி அவரை ஆக்ரோஷமாக நடந்துகொள்ளத் தூண்டும் எந்தவொரு நடவடிக்கையும் தண்டனைக்குரியது.

இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சைனி தன் தவறை ஒப்புக்கொண்டுள்ளதால் அவருக்கு எச்சரிக்கையுடன் ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு வீரரும் 24 மாத காலத்திற்குள் 4 அல்லது அதற்கு மேற்பட்ட தகுதி இழப்புப் புள்ளிகளைப் பெற்றால் அவர் இடைநீக்கம் செய்யப்படத் தகுதியானவர். 2 இடைநீக்கப் புள்ளிகள் சேர்த்தால் அவர் ஒரு டெஸ்ட், 2 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்கப்படலாம். எனவே இந்த தகுதி இழப்பு புள்ளி மூலமாக இனி நவ்தீப் சைனியின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Tags : #INDVSWI #TEAMINDIA #ICC #NVADEEPSAINI #NICHOLASPOORAN