‘ரோஹித், ஜடேஜா விளையாடிய புதிய கேம்’.. அப்போ கோலி என்ன பண்ணாரு..? வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 05, 2019 09:58 PM

இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆகிய இருவரும் டம் சராட் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Ravindra Jadeja and Rohit Sharma play dumb charade

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு இடையேயான 2 -வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 67 ரன்கள் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 15.3 ஓவர்களுக்கு 4 விக்கெட்டை இழந்து 98 ரன்களை எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் டி.எல்.எஸ் (DLS) முறைப்படி இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் ரோஹித் ஷர்மா மற்றும் ஜடேஜா இருவரும் டம் சராட் என்னும் செய்கையின் மூலம் அட்டையில் உள்ள வீரரின் பெயரைக் கண்டுபிடிக்கும் விளையாட்டினை விளையாடினர். அப்போது விராட் கோலியின் பெயர் வர, அவர் போல ஜடேஜா நடித்து காட்டினார். இதை கண்டுபிடிக்க முதலில் தடுமாறிய ரோஹித் பின்னர் விராட் கோலி என கண்டுபிடித்தார். அப்போது அங்கிருந்த கோலி இதனைப் பார்த்து சிரித்தார். கோலி மற்றும் ரோஹித் இடையே சண்டை என்ற சர்ச்சை நிலவிவரும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #VIRATKOHLI #RAVINDRA JADEJA #BCCI #ROHITSHARMA #TEAMINDIA #INDVWI