'போதைப்பொருள்' வழக்கில் சிக்கிய...'ஐபில் அணியின்' உரிமையாளர்...சஸ்பெண்ட் செய்யப்படுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | May 01, 2019 11:24 AM

வாடியா குழுமத்தின் தலைவரும்,கிங்ஸ் 11 பஞ்சாப் அணி உரிமையாளர்களில் ஒருவருமான நெஸ் வடியா, போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டிகளிலிருந்து பஞ்சாப் அணி சஸ்பெண்ட் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

KXIP May Be Suspended From IPL Due To Ness Wadia\'s Arrest

கடந்த மார்ச் மாதம் ஜப்பான் சென்றிருந்த நெஸ் வாடியா தனது பாக்கெட்டில் 25 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக ஜப்பான் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.இதுகுறித்த விசாரணையில் தனது சொந்த பயன்பாட்டிற்காக தான் கஞ்சா வைத்திருந்தாக வாடியா கூறியுள்ளார். ஜப்பானில் கஞ்சாவிற்குத் தடை உள்ளதால் வாடியாவுக்கு 2 ஆண்டுகள் ‘சஸ்பண்டட் ஜெயில்’ என அங்குள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பிரிட்டானியா பிஸ்கட்,  பாம்பே டையிங், கோ- ஏர் நிறுவனங்களும் இவருக்குச் சொந்தமானவைதான். வாடியா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 13.1 பில்லியன் யுஎஸ் டாலர்கள் ஆகும். நெஸ் வாடியாவின் சொத்து மதிப்பு சுமார் 50,000 கோடி ஆகும்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் வாடியா கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் உரிமையாளராக உள்ள,கிங்ஸ் 11 பஞ்சாப் அணி ஐபிஎல் போட்டிகளிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.அணியின் உரிமையாளர் சூதாட்டத்தில் ஈடுபட குற்றத்திற்காக சென்னை அணி 2 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில்,வாடியா மீது எழுந்துள்ள குற்றசாட்டு தற்போது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி 'பிசிசிஐ இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்து கொள்ளாது.இதுகுறித்து விரிவான முடிவுகள் எடுக்கப்படும்.பஞ்சாப் அணிக்கு இது பெரிய தலைவலியாக அமையும்'என தெரிவித்துள்ளார்.

Tags : #IPL #IPL2019 #CRICKET #KINGS-XI-PUNJAB #NESS WADIA #JAPAN