'என்ன 'தல'...இப்படி 'பீல் பண்ண வச்சிட்ட'....நெகிழ்ந்து போன 'பிரபல வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Apr 29, 2019 10:43 AM
கிரிக்கெட் ரசிகர்களிடையே தற்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்திய விஷயம்,தோனி மற்றும் இந்தியன் கேப்டன் விராட் கோலி கொடுத்த கிப்ட் குறித்து தான்.அது யாருக்கு கொடுத்தது என்பது குறித்து தான்,ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் புகழ்ந்து வருகிறார்கள்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த பிப்ரவரி மாதம்,இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது.முதலில் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி,இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையினை கைப்பற்றியது. அதன் பிறகு நடைபெற்ற ஒரு நாள் போட்டியில்,முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஆனால் அடுத்த 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று,கோப்பையினை கைப்பற்றியது.இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.இதனிடையே இந்த கிரிக்கெட் தொடர் முடிந்து 45 நாட்கள் ஆகும் நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச்,இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் தோனி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இட்டுள்ளார்.
அதில் தங்களின் ஜெர்ஸியை எனக்கு பரிசாக கொடுத்ததற்காக நெகிழ்ச்சியுடன் கோலி'க்கும் தோனி'க்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.மேலும் அவரது பதிவில் நான் விளையாடிய அனைத்து போட்டிகளில் இந்திய தொடரில் விளையாடிய 2 போட்டிகளை பெருமையாக மதிக்கிறேன்.அவர்கள் இருவரும் கொடுத்த ஜெர்ஸி மிகவும் அதிர்ஷ்டமானது என குறிப்பிட்டுள்ளார்.
