இந்திய கிரிக்கெட் வீரர் மனைவி நள்ளிரவில் திடீர் கைது..! கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 29, 2019 03:55 PM

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளார் முகமது ஷமியின் மனைவியை போலிஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohammed Shami\'s wife arrested in midnight

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளாரன முகமது ஷமி, இங்கிலாந்தில் நடக்க இருக்கும் உலகக் கோப்பைக்கான இந்தியா அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் சார்பாக விளையாடி வருகிறார்.

முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜாஹா. இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த ஆண்டு கருத்து மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து முகமது ஷமியின் மீது அவரது மனைவி ஹசின் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்த குற்றசாட்டுகளின் மீது பிசிசிஐ நடத்திய விசாரணையில் முகமது ஷமி எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என கூறி அவருக்கு அணியில் விளையாட மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் உள்ள முகமது ஷமியின் வீட்டிற்கு நள்ளிரவு குழந்தையுடன் சென்ற முகமது ஷமியின் மனைவி, ஷமியின் தாய் மற்றும் சகோதரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இது தொடர்பாக ஷமியின் தாய் மற்றும் சகோதரர் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த காவல் துறையினர், முகமது ஷமியின் மனைவி ஹசன் மீது ஐபிசி 151 பிரிவின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #IPL #IPL2019 #TEAMINDIA #CRICKET