“90ஸ் கிட்ஸோட கண்ணீர், உங்கள சும்மா விடாது பாஸ்”.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Apr 25, 2019 11:53 AM

காலமாற்றங்களுக்கேற்பத்தான் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவுமுறைகள் கூட நவீனத் தன்மையை அடைந்து வருகின்றன. அதற்கு சான்றாக சமூக வலைதளங்களில் ஆசிரியர்கள் சிலர் மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Watch:friendly teachers dancing encouraging students video goes viral

80,90களின் பள்ளிக்காலங்கள் எல்லாம் அபரிமிதமானவை. ஆசிரியர்கள் என்றாலே நடுங்குவர். மரியாதைக்கு இணையான பயமும் மாணவர்களிடத்தில் எப்போதும் தொற்றிக்கொண்டிருக்கும். ஆசிரியர்களுமே அந்த கெத்தை மெயிண்டெயின் செய்வார்கள். கொஞ்சம் மாணவர்களுடன் இறங்கி, இணங்கி சகஜமாக பழகினால், அந்த ஆசிரியர்களின் சமத்துவ அங்கீகாரத்தை துஷ்பிரயோகம் செய்துகொள்ளும் மாணவர்களும் உண்டு.

ஆனால் சமீபத்திய வீடியோ ஒன்றில் இளம் மாணவர் ஒருவர் தமது வகுப்பறையில் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களின் முன்னிலையில் தன்னை மறந்து ஆடுகிறார். அவரது கொண்டாட்டத்தில் பங்கு கொள்ளும் விதமாக ஆசிரியைகளும் களத்தில் இறங்கி ஆடத் தொடங்குவதை மாணவர்கள் ஆர்ப்பரித்து கைத்தட்டுகின்றனர்.

ஆனால் அந்த மாணவர் நடனமாடும்போது கூட மாணவர்கள் ஆசிரியர்களால் சுயமரியாதையுடன் நடத்தப்படுவதும், ஆசிரியர்கள் மாணவர்களால் மாண்புடன் மதிக்கப்படுவதும் கண்கூடாகத் தெரிகிறது. பெற்றோருக்கு அடுத்தபடியாக இந்த உலக அறிவை கல்வி நிலையங்களில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் உலகத்தை அழகாகவும் அறத்துடனும் சிருஷ்டிக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதற்கு இந்த வீடியோ உதாரணம்.

Tags : #STUDENTS #VIRALVIDEOS #DANCVE #TEACHERS