‘ஆஹா.. இப்ப இதுங்களாம் இப்படி எறங்கிடுச்சா..’ இன்ஸ்டாகிராம் யூஸ் பண்ணும் சிம்பன்ஸி!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Apr 26, 2019 05:33 PM

மனிதகுலத்தின் ஆதி அடையாளமாய்த் திகழும் சிம்பான்ஸி குரங்கு ஒன்று இன்ஸ்டாகிராமை ஆழ்ந்து பயன்படுத்தும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது.

Chimpanzee monkey browsing smartphone and using Instagram viral video

சமூக வலைதலங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும் இன்ஸ்டாம்கிராம் ஆப் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டண்ட்டாக போஸ்ட் செய்துகொள்ளும் ஒரு பொழுதுபோக்கு அம்சத்தை முன்வைத்து பிரபலமாகிய ஆப்தான் இந்த இன்ஸ்டாகிராம் ஆப் என்பதால், இதனை பெரும்பாலும் செல்ஃபி மோகம் உடையவர்கள் பயன்படுத்துவர்.

ஆனால் சிம்பன்ஸி குரங்கு ஒன்று செல்போனில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி, அதற்கு அடிமையாக மாறியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. மைக் ஹால்ஸ்டன் என்கிற சுற்றுச் சூழலியலாளர் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் சிம்பன்ஸியின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

மிகவும அண்மையில்தான், ராணுவ வீரர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க வித்தியாசமாக சில கொரில்லா குரங்குகள் போஸ் கொடுத்த சம்பவம் வைரலானது. இந்த நிலையில் சிம்பன்ஸி குரங்கு மனிதர்களைப் போலவே, இன்ஸ்டாகிராம் ஆப்பினை சரமாரியாக பயன்படுத்தும் வீடியோவை 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ட்விட்டரில் இதுவரை கண்டுகளித்துள்ளனர்.

Tags : #CHIMPANZEE #VIRALVIDEOS #VIDEOVIRAL #INSTAGRAM