‘தேசியக் கொடியில் சந்திரன்’... 'சந்திராயன் விண்கலம் குறித்து'... ‘சிஎஸ்கே வீரரின் வைரல் ட்வீட்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 23, 2019 01:35 PM

வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திராயன் விண்கலம் குறித்து இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ஹர்பஜன் சிங் வித்தியாசமாக ட்வீட் செய்துள்ளார்.

harbhajan singh tweet after chandrayaan 2 launch in sriharikota

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுத்தளத்திலிருந்து, திட்டமிட்டப்படி கடந்த திங்கள்கிழமை பிற்பகல் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் 3.8 டன் எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் கொண்டுசென்று, புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தியது. சிறிது காலம் புவி வட்டப் பாதையைச் சுற்றி வரும் சந்திரயான்-2, பின்னர் நிலவின் புவி வட்டப் பாதைக்கு மாறிப் பயணித்து சந்திரனில் ரோவர் ஆய்வு கலத்தை தரையிறக்கும்.

சந்திரயான் -2 விண்கலம்  வெற்றியடைந்ததையடுத்து, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், வீரேந்திர சேவாக், கேப்டன் விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட பலர்  இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் ஹர்பஜன் சிங் சற்றே வித்தியாசமாக, தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார். தன் ட்வீட்டில், ‘சில நாடுகள் தங்களின் தேசியக் கொடியில், சந்திரனைக் கொண்டுள்ளன. ஆனால், சில நாடுகளின் தேசியக் கொடி மட்டும் தான், சந்திரனில் உள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

Tags : #CSK #HARBHAJANSINGH