'கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க'...'மான்கடிங் பண்ணிருந்தா'?... 'பாகிஸ்தானை கலாய்த்த இந்திய வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jul 06, 2019 10:29 AM

நடப்பு உலகக்கோப்பை போட்டியில் நான்காவது இடத்தை பிடிப்பதில் பாகிஸ்தானிற்கும், நியூசிலாந்திற்கும் போட்டி நிலவியது. இருப்பினும் 11 புள்ளிகளுடன் அதிக ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. இருப்பினும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெறுவோம், என பாகிஸ்தான் கேப்டன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

Pakistan should try Mankading Indian spinner Ashwin Troll Pakistan

ஆனால் அதற்கு நிச்சயம் வாய்ப்பில்லாமல் தான் இருந்தது. காரணம் பாகிஸ்தான் அணி 313 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் தான், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு பாகிஸ்தானிற்கு இருந்தது. இந்நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.இதையடுத்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது.

இந்த ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறாது என்பது உறுதியாகிவிட்டது. காரணம் பங்களாதேஷ் அணியை 7 ரன்னில் ஆட்டமிழக்க செய்ய வேண்டும் என்ற என்ற கட்டாயம் பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டது. இதையடுத்து பங்களாதேஷ் அணி 8 ரன் எடுத்த போதே பாகிஸ்தானுக்கான அரையிறுதி வாய்ப்பு தகர்ந்தது.

இதனிடையே பாகிஸ்தான் அணியினை இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ட்விட்டரில் பயங்கரமாக கலாய்த்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில் ‘பாகிஸ்தான் அணி தகுதி பெற 311 ரன்கள் வித்தியாசம் தேவை.’ என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர் 'மான்கடிங் செய்வது கூட பாகிஸ்தானுக்கு கைகொடுக்காது.' என பதிலளித்திருந்தார். அதற்கு பதிலளித்த அஸ்வின் 'நிச்சயமாக. பவுலர் முனையில் 10 ரன் அவுட் செய்தால் கூட இது முடியாத விஷயம்' என கிண்டலாக பதிவிட்டிருந்தார். அவரின் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.