'இது கொஞ்சம் கூட நல்லா இல்ல'... 'அவரு இந்திய அணியின் சொத்து'... 'இப்டி பண்ணாதீங்க'... கவுதம் கம்பீர் காட்டம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Feb 05, 2020 07:41 PM

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், பேட்டிங் வரிசையில் இந்திய அணி எடுத்த முடிவு குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

KL Rahul remove from the top order is not an great idea

5 ஒருநாள் டி20 போட்டியை வாஷ் அவுட் செய்து வெற்றிபெற்ற இந்திய அணி, ஹாமில்டனில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இமாலய ரன்கள் எடுத்தும் தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா விலகிய நிலையில், தொடக்க ஆட்டக்காரர்களாக, இளம் வீரர்களான பிரித்விஷா மற்றும் மயங்க் அகர்வால் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினர்.

ஆனால் அவர்கள் இந்தப் போட்டியில் சரியாக சோபிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல் 5-வது இடத்தில் களமிறக்கப்பட்டதுடன், விக்கெட் கீப்பிங்கும் செய்தார். தற்போது இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறுகையில், தொடக்க வீரர் வரிசையில் இருந்து கே.எல். ராகுலை கீழே இறக்குவது என்பது சரியான முடிவாக இருக்காது. மயங்க் அகர்வாலுடன், கே.எல். ராகுல் விளையாடுவதே அணிக்கு சிறந்ததாக இருக்கும்.

கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் காம்பினேஷன் ஓப்பனிங் செய்தால் விக்கெட் கீப்பிங்கில், ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கிடைக்கும். கே.எல். ராகுல் இந்திய அணிக்கு கிடைத்த சொத்து. அவரை டி20 போட்டியில் கூட விக்கெட் கீப்பராக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் 50 ஓவர் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்ய வைக்கக் கூடாது. அப்படி செய்தால் அவர் மீது அழுத்தம் அதிகரிக்கும். இதனால் அவருக்கு அதிக சுமை உண்டாகும்’ என்று கம்பீர் காட்டமாக கூறியுள்ளார்.

Tags : #KLRAHUL #GAUTAMGAMBHIR #CRICKET #INDVSNZ #OPENER #WICKET KEEPER