கண்ணக் கட்டிட்டு 'கெணத்துல' குதிக்குறதுன்னு சொல்வாங்களே... அது 'இதானா'?... 'மட்டமான' சாதனையால் குமுறும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 06, 2020 12:12 AM

கடந்த டி20 தொடரில் சிறப்பாக பந்துவீசிய நவ்தீப் சைனியை விடுத்து, ஷர்துல் தாகூரை அணியில் எடுத்த கேப்டனின் தேர்வு குறித்து ரசிகர்கள் வெகுவாக அதிருப்தி அடைந்துள்ளனர்.

Picking Shardul Thakur is a blunder, Twitter Roasts Kohli

நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் சாதனை படைத்தது. 347 ரன்கள் அடித்தும் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதற்கு பீல்டிங்கில் இந்திய வீரர்கள் செய்த தவறும், பவுலர்கள் ரன்களை வாரி இறைத்ததுமே முக்கிய காரணமாகும்.

இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் இளம்வீரர் சைனிக்கு பதிலாக ஷர்துல் தாகூரை எடுத்ததற்கு ரசிகர்கள் மோசமான தேர்வு என கேப்டன் விராட்டை சாடி வருகின்றனர். நேற்றைய போட்டியில் நோ பால் உட்பட ஒரே ஓவரில் 22 ரன்களை தாகூர் வாரி வழங்கினார். ஒருநாள் போட்டியில் ஒரு இந்திய வீரரின் மோசமான 3-வது பந்துவீச்சாக இது அமைந்துள்ளது.

இதனால் சைனிக்கு பதில் தாகூரை எடுத்தது கண்ணை கட்டிக்கொண்டு கிணத்தில் குதித்ததற்கு சமம் என்றும், அடுத்த போட்டியில் சைனி, சாஹல் இருவருக்கும் வாய்ப்பு வழங்கும்படியும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் வரும் போட்டியில் குல்தீப், தாகூர் இருவருக்கும் பதிலாக சாஹல், சைனி இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.