'தோத்துட்டோம்னு' கவலைப்படாதீங்க மக்கா!... இத 'கொஞ்சம்' பாருங்க... புள்ளிவிவரத்துடன் 'களமிறங்கிய' ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் அடித்தும் நியூசிலாந்து அணியிடம் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு நியூசிலாந்து அணி பழி தீர்த்துக் கொண்டுள்ளது.

இதனால் இந்திய ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இவ்வளவு ரன்கள் அடித்தும் இந்திய அணியால் ஜெயிக்க முடியவில்லை என்பதால் பவுலர்களையும், கேப்டன் விராட்டையும் கண்டபடி சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
Not A Great Day For Team India..!
Come Back Stronger 👍👍#INDvNZ #INDvsNZ pic.twitter.com/wCp7HOZJhx
— Tamil Viratians 🔥 (@Tamil_Viratians) February 5, 2020
இந்த நிலையில் சுவாரஸ்யமான புள்ளிவிவரம் ஒன்றை ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். அதாவது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. ஆனால் அதன் பின்னர் சுதாரித்துக்கொண்ட இந்திய அணி அடுத்த 2 போட்டிகளிலும் வென்று 2 அணிகளுக்கு எதிராகவும் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
இதனால் கண்டிப்பாக அடுத்த 2 போட்டிகளையும் வென்று நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றும் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. ரசிகர்களின் நம்பிக்கை உண்மையாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
