'இந்திய வீரர்களை பார்த்து மோசமாக கிண்டல்'... 'மைதானத்தில் நடந்த மோதல்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Feb 10, 2020 09:38 AM

வெற்றி களிப்பில் இருந்த வீரர்கள், இந்திய வீரர்களை கிண்டல் செய்ததால் மைதானத்தில் மோதல் உருவானது. இதனால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Under-19 World Cup final : India-B’desh Players Involved in Ugly Spat

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல்முறையிலேயே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வங்கதேசம் சாதனை படைத்தது. இந்த போட்டியில்  42.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து, வங்கதேச அணி வெற்றிபெற்று, உலகக் கோப்பையை கைப்பற்றியது.

வங்கதேச அணி வெற்றி பெற்றவுடன் அந்த அணி வீரர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்து வெற்றியை கொண்டாடினர். அப்போது வங்கதேச வீரர்கள், இந்திய வீரர்களை கடும் வார்த்தைகளால் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து இந்திய அணி பயிற்சியாளர் ஓடி வந்து இந்திய அணி வீரர்களை சமாதானப்படுத்தினார்.

இருப்பினும் வாக்குவாதம் அதிகமாகி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து அதிகாரிகள் பலரும் மைதானத்திற்குள் வந்து இரு அணி வீரர்களையும் எச்சரித்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #CRICKET #BANGLADESH #U19 WORLDCUP #U19 WC FINAL