யார்ரா இந்த 'குட்டி' பும்ரா...! 'அப்படியே அதே ஸ்டைல் பவுலிங்...' வைரலாகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Feb 09, 2020 08:42 PM

நியூசிலாந்து சேர்ந்த சிறுவன் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவை போல பந்துவீசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டுவருகிறது.

new zealand boy bowls like fast bowler jasprit bumrah

இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா(27). இந்திய அணியில் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களிலேயே பும்ராவுக்கு மிக முக்கியமான இடம் உள்ளது.

ஐசிசி அறிவித்த 2019 உலகக்கிரிக்கெட் சிறந்த அணி பட்டியலில் பும்ராவின் பெயரும் எதிரணி வீரர்களுக்கு அசைக்க முடியாத ஒரு சிம்ம சொப்பனமாக இருந்துவருகிறார். கிரிக்கெட் மைதானத்தில் பந்து வீசுவதற்கு பும்ரா ஓடி வரும் ஸ்டைல் காண்போருக்கு ஒரு வித பரவசத்தையும், பார்ப்பதற்கு வித்தியாசமாகவும்  தோன்றும்.

எதிர் அணியை நோக்கி, பந்து வீச ஓடும் அவரது ஓட்டம் நின்று நின்று ஓடுவது போல தெரியும். நாளடைவில் அதுவே அவரது அக்மார்க் ஸ்டைலாக மாறியது. தற்போது, நியூசிலாந்தைச் சேர்ந்த சிறுவன், அப்படியே பும்ராவை நகலெடுத்தது போல பந்து வீசி அனைவரது கவனத்தை ஈர்த்துவருகிறான். அந்தச் சிறுவனின் வீடியோவை நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் ரீ ட்விட் செய்துள்ளார். இந்த வீடியோ கிரிக்கெட் மற்றும் பும்ராவின் ரசிகர்களால் சமூக வலைதங்களில் வேகமாக பகிர்ந்து வைரலாகி வருகிறது.

 

Tags : #CRICKET #JASPRITBUMRAH