'இந்த மாதிரி டைம்ல விரக்தியா இருக்கும்'.. 'சிறந்த ஃபினிஷராக ஃபார்ம் ஆகும்' வீரர் உருக்கம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Aug 07, 2019 05:06 PM
தோனிக்கு பிறகு அவரைப் போன்ற சிறப்பான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிடைப்பதென்பது அரிதினும் அரிதாக இருந்த காலக்கட்டத்தில்தான், ரிஷப் பந்த் மீது நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது.
எனினும் தோனியின் ஃபார்மை தோனியே அண்மையில்தான் ரிநியூவ் பண்ணியிருந்தார் எனும்போது ரிஷப் பந்த்திடம் அதனை முழுமையாக எதிர்பார்க்க முடியாது என்றும் கங்குலி கூறியிருந்தார். அந்த அவகாசம் இருந்தாலும் கூட, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் மோசமாக ஆடும் ரிஷப் பந்த் அடுத்த தோனியா? எனும் அளவில் விமர்சனங்கள் எழாமல் இல்லை.
ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் கோலியுடன் இணைந்து, 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல், கடைசி பந்தினை தோனி பாணியில் அடித்து சிறந்த ஃபினிஷராக ரிஷப் தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. எனினும் ரன்கள் எடுக்காதபோது தனக்குள் விரக்தியான மனநிலை உண்டாவதாகவும், அந்த சமயத்தில் கவனத்தை அதில் செலுத்தாமல் சிறப்பாக விளையாடுவதில் மட்டுமே செலுத்துவதாகவும் ரிஷப் குறிப்பிடுகிறார்.
என்னதான் ப்ரஷர் இருந்தாலும், நன்றாக விளையாடுவதற்கு தனது உள்ளுணர்வு தன்னை உந்தித் தள்ளுவதாகவும், அதே சமயம், நன்றாக விளையாட முடியாதபோது உண்டாகும் விரக்தி, அணியில் உள்ள சக வீரர்களின் தேற்றுதலால், அவர்கள் கொடுக்கும் தன்னம்பிக்கையால், ஆதரவு வார்த்தைகளால் ஒரு சுய மன உறுதி உண்டாவதையும் நினைத்து பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.