‘பிரபல இளம் வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்’.. ‘இந்தியா ப்ளூ’ அணிக்கு கேப்டனாக நியமித்த பிசிசிஐ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Aug 07, 2019 12:06 PM
துலீப் டிராபியில் இந்திய ப்ளூ அணியின் கேப்டனாக இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா பாணியில் கடந்த ஆண்டு பகலிரவு போட்டியாக துலீப் டிராபி நடத்தப்பட்டது. அப்போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த வருடம் பிங்க் நிற பந்துக்கு பதிலாக சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கடைசி போட்டி மட்டும் பிங்க் நிற பந்தில் பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிள்ளது.
இப்போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 17 -ம் தேதி முதல் செப்டம்பர் 9 -ம் தேதி வரை பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்தியாவின் டாப் உள்நாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியா ப்ளூ, இந்தியா க்ரீன், இந்தியா ரெட் என்ற மூன்று அணிகளை பிசிசிஐ அறிவித்தது. இதில் இந்தியா ப்ளூ அணிக்கு கேப்டனாக இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்தியா க்ரீன் அணியிக்கு கேப்டனாக பைஸ் பாசல் மற்றும் இந்தியா ரெட் அணிக்கு கேப்டனாக பிரியங்க் பாஞ்சல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
