இனிமேல் இதெல்லாம் ‘வாட்ஸ்அப்பிலும்’ பண்ணலாம்.. ‘ஃபன் ஃபீட்சரால் உற்சாகத்தில் பயனாளர்கள்..’

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Saranya | Aug 09, 2019 12:45 PM

உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக உள்ளது வாட்ஸ்அப் செயலி.

WhatsApp to soon get Instagrams boomerang feature

பிரபலமான வாட்ஸ்அப் செயலி செய்திகள், புகைப்படம், வீடியோ ஆகியவற்றை அனுப்பவும், வாய்ஸ் காலிங், வீடியோ காலிங் செய்யவும் பயன்படும் ஒன்றாகும். தனியாக ஒரு நபரையோ அல்லது ஒரு குரூப் தொடங்கி பலரை ஒரே நேரத்திலோ இதில் தொடர்பு கொள்ள முடியும். இதனால் பயனாளர்களுக்கு விருப்பமானதாக உள்ள வாட்ஸ்அப் செயலி, பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவ்வப்போது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் புதிதாக பூமராங் வீடியோ வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. இன்ஸ்டாகிராமில் உள்ள பூமராங் வீடியோ வசதி வாட்ஸ்அப்பிலும் பயனாளர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதி அறிமுகமான பின் 7 நொடிகளுக்குள் அடங்கும் பூமராங் வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பவும், ஸ்டேட்டஸாக வைத்துக் கொள்ளவும் முடியும் என வாட்ஸ்அப் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் iOS பயனாளர்களுக்கு அறிமுகமாக உள்ள இந்த வசதி அடுத்து ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது.

Tags : #WHATSAPPUPDATE #WHATSAPP #NEW #FEATURE