‘CHILLING’ என ‘ஃபோட்டோ பதிவிட்ட பிரபல இந்திய வீரர்’.. ‘கலாய்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Sep 26, 2019 11:38 AM

இந்திய வீரர் கே.எல்.ராகுல் டிவிட்டரில் பதிவிட்ட புகைப்படத்தால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

KL Rahul brutally trolled after latest social media post

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் 4 போட்டிகளில் 44, 38, 13, 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்காததால் ராகுல் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் ஆடும் 11 பேரில் தேர்வு செய்யப்படவில்லை.

மேலும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருவதால் ராகுலுக்கு பதிலாக தற்போது ரோஹித் ஷர்மாவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ராகுல் டிவிட்டரில் சில்லிங் என பதிவிட்ட புகைப்படத்தால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். சமூக வலைதளங்களில் அவர் நேரம் செலவிடுவதை விட்டுவிட்டு போட்டிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

 

 

— Ravi Shanker Singh (@Braj18) September 24, 2019

 

Tags : #TEAMINDIA #KLRAHUL #ROHITSHARMA #T20 #TEST #WI