VIDEO: அந்தப்பக்கம் 'பாதாள' கிணறு உள்ளது... நடுரோட்டில் 'டிக் டாக்' செய்த இளைஞர்களை பார்த்து... சிரிப்பாய் 'சிரித்த' பொதுமக்கள்!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்டிக் டாக் மோகம் இளைஞர்கள் மத்தியில் புற்றீசல் போல பெருகி வருகிறது. நடுரோடு, சுடுகாடு, திருமணம், மலைகள், காடுகள் என ஒரு இடம் பாக்கியில்லாது டிக் டாக் செய்வதையே சிலர் தொழிலாக வைத்துள்ளனர். எவ்வளவு தான் அதில் உள்ள ஆபத்துக்களை எடுத்து கூறினாலும், உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் டிக் டாக் இருந்தால் சோறு, தண்ணி இல்லாமல் இருப்பவர்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடுரோட்டில் டிக் டாக் செய்த இளைஞர்களை பார்த்து பொதுமக்கள் சிரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் மலை ரோட்டின் ஓரத்தில் நின்றுகொண்டு இரண்டு இளைஞர்கள் டான்ஸ் ஆடி டிக் டாக் செய்ய மேலே வரும் பேருந்து ஒன்று அவர்களை நோக்கி வருகிறது. இதனால் அதிர்ந்து போன இருவரும் டக்கென மேலே உள்ள பாலத்தில் பதறியடித்து ஏறுகின்றனர்.
கொஞ்சம் சந்தோஷமா இருந்தா பொறுக்காதே 🙄🙄 pic.twitter.com/JoTpOv28AR
— முகிலன் ™ (@MJ_twets) February 6, 2020
அந்தப்பக்கம் பள்ளத்தாக்கு இருக்கிறது. இதைப்பார்த்து இளைஞர்கள் இருவரும் அதிர்ந்து கொண்டிருக்கையிலேயே, சட்டென பேருந்து வளைந்து செல்ல இளைஞர்கள் இருவரும் அப்பாடா என, பாலத்தின் மேலிருந்து கீழே குதிக்கின்றனர். இதைப்பார்த்த பொதுமக்கள் இவர்களை பார்த்து சிரித்து விட்டு செல்கின்றனர்.
