'இதுதான்யா கொண்டாட்டம்’.. ஜெயிச்ச கையோட பர்த்டே கொண்டாடிய வீரர்.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | May 15, 2019 12:27 AM

12வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 23-ஆம் தேதி தொடங்கியது.

Pollard Crazy Birthday Celebration after winning Ipl 2019 viral video

அண்மையில் கடந்த மே 12-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸூம் மும்பை இந்தியன்ஸும் மோதிக்கொண்ட பரபரப்பான இறுதிப் போட்டியில் 4வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இந்த வருட ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

முன்னதாக பிராவோ வீசிய  பந்துகளை எதிர்கொண்ட பொல்லார்ட், கிரீஸை விட்டு நகர்ந்து நின்றதால் அம்பயர்களால் எச்சரிக்கப்பட்டபோது டென்ஷனானார். எனினும் 149 ரன்கள் எடுத்த மும்பை அணிக்கு, 41 ரன்கள் அடித்த பொல்லார்ட்  வெற்றிக்கான வழிவகுத்தவர்களுள் முக்கியமானவர்.

கடைசி ஓவரில் ஸ்டெம்பை விட்டு தள்ளி நின்று பிராவோவின் பந்தினை அடிக்க முயற்சித்ததால் பரபரப்பாக பேசப்பட்ட பொல்லார்டு, தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியையும் தனது பிறந்த நாளையும் ஒருசேர கொண்டாடு விதமாக கேக்கில் முகத்தை வைத்து தேய்த்து, கொண்டாடியுள்ள செயலும் வைரலாகியுள்ளது.

Tags : #MUMBAI-INDIANS #IPL #IPL2019 #POLLARD