“கண்ல தண்ணி வரவச்சுடீங்களே பங்கு”!.. ‘கவலப்படாதீங்க என்னைக்குமே நீங்க எங்க பங்குதான்’!.. கண்கலங்க வைக்கும் ஹர்பஜன் சிங்கின் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | May 13, 2019 10:34 AM

சிஎஸ்கே அணி வீரர் ஹர்பஜன்சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது நன்றியை கண்கலங்க தெரிவித்துள்ளார்.

harbhajan says thanks to all the csk supporters and the Tamil people

12 வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், பரபரப்பாக நடந்த இந்த ஐபிஎல் தொடரில் நேற்று (13/05/2019) நடந்த இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.

இதனையடுத்து, பரபரப்பாக நடந்த இறுதி போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்யாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன்சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது நன்றியை தெரிவிக்கும் விதமாக தங்களது ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளார்.

இதில், “தமிழ் மக்கள் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், எங்களை தங்கள் இல்லங்களில் ஒருவன் போல அரவணைத்து அன்பு செலுத்திய உறவுகளின்  இப்பண்பு என்னை நெகிழ செய்தது. நான் மீண்டும் அடுத்த வருடமும் சிஎஸ்கேவுக்கு விளையாடுவேன் என்ற நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன்”. என்று தன் ட்வீட்டர் பக்கத்தில் தங்களது ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.

 


 

Tags : #CHENNAI-SUPER-KINGS #IPL2019 #HARBHAJAN SINGH