'அந்த ஒரே ஒரு விக்கெட் தான்' ...'விவாதத்தை தொடங்கிய ரசிகர்கள்'... மனம் திறந்த 'பிரபல வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | May 13, 2019 10:20 AM

ஐபிஎல் 12வது சீஸனின் இறுதி ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை தட்டி சென்றது.இது சென்னை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.இதனிடையே போட்டி குறித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்து பேசியுள்ளார்.

Key moment was Dhoni run-out, says Tendulkar

இறுதி போட்டியில் மும்பை-சென்னை அணிகள் மொத போகிறது என்றதுமே பரபரப்பு தொற்றி கொண்டது. ஆனால் இந்த பரபரப்பு நேற்றைய போட்டியின் இறுதி பந்து வரை இருந்தது.அதிலும் குறிப்பாக சென்னை அணி கேப்டன் தோனி ரன் அவுட் ஆனவுடன்,ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றி கொண்டது.சென்னை ரசிகர்களுக்கு இதயமே நின்று விட்டது என கூறலாம்.ஆட்டத்தின் 13-வது ஓவரில் ஹர்திக் வீசிய பந்தில் இரண்டாவது ரன் எடுக்க முயன்றபோது,தோனி ரன் அவுட் ஆனார்.இது தான் தற்போது ரசிகர்களிடையே பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

ரீப்ளேவில் பார்க்கும்போது, தோனி க்ரீஸ்ஸின் நுனியில் பேட்டை வைக்கவும்,பந்து ஸ்டம்ப்பில் படவும் சரியாக இருந்தது. பல கேமரா கோணங்களில் பார்த்த பின்னர், மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தார்.இதுதான் தற்போது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை கிளப்பியுள்ளது.இதுபோன்ற சிக்கலான நேரங்களில் பேட்ஸ் மேன்களுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு கொடுக்கப்படும்.ஆனால் தோனி விஷயத்தில் எப்படி அவுட் கொடுக்கப்பட்டது என ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.

இதனிடையே போட்டி முடிந்த பிறகு பேசிய மும்பை அணியின் ஐகான் சச்சின் டெண்டுல்கர், ''தோனியின் ரன் அவுட் தான் ஆட்டத்தில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.மேலும் பும்ராவின் பந்துவீச்சு பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் விதத்தில் அமைந்தது. குர்னால் பாண்டியா அதிக ரன்களை கொடுத்த போதும்,பும்ரா தனது ஓவரில் ரன் விகிதத்தை கட்டுப்படுத்தினார்.

ராகுல் சஹாரை பற்றி நிச்சயமாக குறிப்பிட்டு ஆக வேண்டும்.முதல் போட்டியிலேயே நல்ல அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அவர் ஒரு திறமையான வீரர் என்பதனை தற்போது முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.இதன் மூலம் மும்பை அணி திறமையான இளைஞர்கள் உள்ள அணி என்பதனை நிரூபித்திருக்கிறது என.சச்சின் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.