'இவ்ளோதானே.. இந்தா நிறைவேத்திடலாம்'.. சிறுமியின் கனவுக்கு அடித்தளமிட்ட கலெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 14, 2019 10:59 PM

குழந்தைகள் சிறியவர்கள்தான் என்றாலும், அவர்களின் கனவுகள் அளப்பரியவை. அவற்றைன் எதற்குள்ளும் அடக்க முடியாது. அவர்களின் கனவுகள் கற்பனைகளை மீறியவை. ஆனால் அவற்றுக்குள் பொதிந்திருப்பதோ, அவர்களின் தூய்மையான மனநிலை. அதற்கான விதை வளரும்போதே அவசியமான ஊக்கத்தால்தான் கிடைக்கிறது.

Karur Collector allows 6th standard girl student to sit in his chair

அப்படித்தான், தனது சீட்டில் உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்று யதார்த்தமாகக் கேட்ட அரசுப்பள்ளி மாணவச் சிறுமியின் எதிர்காலக் கனவுக்கான துடுப்பாக, அவள் கேட்டபடி, தனது சீட்டில் அமர்த்தி அழகுபார்த்திருக்கிறார், கரூர் மாவட்ட ஆட்சியாளர் அன்பழகன். திருச்சி, கரூர் மாவட்டங்களுக்கிடைப்பட்ட குளித்தலை அருகேயுள்ள பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்தவர் மாணவி மனோப்ரியா. படிப்பில் படுச்சுட்டியான இவர், கலெக்டராக வேண்டும் என்ற விதையினை தனது ஆசிரியர் பூபதி சொல்லும் சகாயம் ஐஏஸ் போன்றோர்களின் உதாரணங்களைக் கேட்டு, தனது சிந்தனைக்குள் விதைத்துக்கொண்டிருக்கிறார்.

ஆண்டுத் தேர்வில், எல்லாரும் அவரவர் இலட்சியத்தை எழுதும்போது, மனோப்ரியா, கலெக்டர் ஆக  வேண்டும் என்கிற தனது லட்சியத்தை எழுதியதோடு, ஆசிரியர் பூபதியிடம் தனக்கு கலெக்டர் அன்பழகனை பார்க்க வேண்டும் என்கிற ஆசையைச் சொல்லியிருக்கிறார். அதன் பேரில் ஆசிரியர் பூபதி இன்னும் 5 மாணவர்களுடன் ஆட்சியர் அன்பழகனைக் காண விருப்பம் கேட்டு வாட்ஸ்-ஆப்பில் தட்டியிருக்கிறார்.

அதன் பின்னர்தான், ஆட்சியர் அன்பழகன் மனோப்ரியாவின் விடைத்தாளை பார்த்ததோடு, தனது சீட்டில் உட்கார வைத்து அழகுபார்த்துள்ளார். மேலும், எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் ஆசிரியர்களை மறக்கக் கூடாது, அவர்களால் நல்ல மனிதர்களுடன் கூடிய சமூகத்தை உருவாக்க முடியும், தனது ஆசிரியர் ஆறுமுகம்தான் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்க விதை போட்டவர், அவர்தான் தன்னுடைய பாஸ்வேர்டாகவும் இப்போதிருக்கிறார் என்றெல்லாம் கூறி மாணவியை மோட்டிவேட் செய்துள்ளார் ஆட்சியர் அன்பழகன். இதுகுறித்து மாணவி, விகடன் இதழுக்கு பிரத்யேகமாகப் பேட்டியளித்துள்ளார்.

Tags : #IAS #INSPIRATION #ANBAZHAGAN