“சச்சின் என்ன பாத்து என்ன சொன்னார் தெரியுமா?”.. ‘போட்டின்னு வந்துடா நான் இப்டிதான் விளையாடுவேன்’!.. மனம் திறக்கும் பும்ரா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | May 13, 2019 06:24 PM

ஐபிஎல் தொடர் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலர் பும்ரா தனது விளையாட்டு அனுகுமுறை குறித்து தெரிவித்துள்ளார்.

bumrah says his experience and sachin\'s words him during this ipl

12 வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று (12/05/2019) நடந்தது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்யாசத்தில் வென்றது. இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 4 வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இதுகுறித்து, மும்பை அணி வீரர் பும்ரா கூறுகையில், இந்த போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை நழுவவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடைசிப் பந்து வரை பெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு போராடியது.

இந்நிலையில், ``இந்த ஓவரில் என்ன நடக்கும் என்பதைவிட, இந்தப் பந்தை எப்படி வீசவேண்டும் என்பதிலே என் முழுக் கவனம் இருக்கும். ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு பந்தும் முக்கியமானது. ஒரு சமயத்தில், ஒரு பந்தின் மீது மட்டுமே கவனம் கொள்வேன். அதனால்தான் இக்கட்டான சூழ்நிலைகளையும் சுலபமாக சமாளிக்க முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பும்ராதான் உலகின் சிறந்த பெளலர். இன்னும் சிறப்பான பல ஆட்டங்கள் பும்ராவிடம் இருந்து வர உள்ளன". இந்நிலையில், டெத் பெளலர் ஸ்பெஷலிஸ்டாக திகழ்ந்து வரும் பும்ரா, நெருக்கடியான சூழ்நிலைகளிலும் அசால்டாக கடந்துவிடுகிறார் என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியது என்னால் மறக்கவே முடியாது என்றும் பும்ரா கூறியுள்ளார்.

Tags : #IPL2019 #MUMBAI-INDIANS #SACHIN TENDULKAR #BUMRAH