“அட ஜெயிச்சவங்கள பாராட்டுனது போதும், தோத்தவங்களையும் பாராட்டுங்கப்பா”!.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளிய பிரபல வர்ணனையாளர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | May 13, 2019 05:01 PM

ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதை பாராட்டுவதை நிறுத்திவிட்டு சிஎஸ்கேவை பாராட்டுங்கள் என்று வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.

harsha bohgle says wish the runner of this ipl csk for massive play

12 வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று நடந்தது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்யாசத்தில் வென்றது. இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 4 வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், மும்பை அணியின் வெற்றியை அந்த அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், மும்பை அணிக்கு ஆதரவாக கருத்து கூறிய சஞ்சய் மஞ்சுரேக்கருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தனது ட்வீட்டர் பக்கத்தில், “எப்போதும் வெற்றி பெற்றவர்களை இந்த நேரத்தில் கொண்டாடுவோம். ஆனால் அதனை சிறிது நிறுத்திவிட்டு இந்த சீசனில் மிக சிறப்பாக விளையாடிய சிஎஸ்கே அணியை பாராட்டி ஆக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.