“அட சோனமுத்தா போச்சா”!.. ‘எப்பா பொல்லார்டு கடைசில இப்டி ஆகிடுச்சே’!.. ஐபிஎல் நிர்வாகம் அதிரடி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | May 13, 2019 01:50 PM
ஐபிஎல் தொடரில் நேற்று (12/05/2019) நடந்த இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் பொலார்டு போட்டியின் விதிகளை மீறி நடந்ததற்காக ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

12 வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், பரபரப்பாக நடந்த இந்த ஐபிஎல் தொடரில் நேற்று (12/05/2019) நடந்த இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் மும்பை அணி வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில் முதலில் மும்பை அணி பேட்டிங் செய்தது. அப்போது, மும்பை அணி வீரர் போலார்ட் எதிர்கொண்ட கடைசி ஓவரை சென்னையின் பிராவோ வீசினார்.
அப்போது பிரவோ தொடர்ந்து 2 முறை பந்துகளை அகலமாக வீசினார். போலார்ட் கிரீசில் சரியாக நிற்காத நிலையில் இரண்டு முறையும் அகலப்பந்துக்கான ரன்கள் வழங்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த போலால்ட் 3வது பந்தை பிராவோ வீச வந்த போது கிரீசைவிட்டு விலகி சென்றார். இதனையடுத்து களநடுவர்கள் அவரிடம் சென்று எச்சரித்தனர்.
இந்நிலையில், போலார்ட் செய்த செயல் ஐபிஎல் விதிகளுக்கு எதிரானது என்று ஐபிஎல் நிர்வாகம் பொலார்டுக்கு அவரது ஒரு போட்டிக்கான சம்பளத்திலிருந்து 25 சதவீதத்தை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.
