‘கோப்பையை நீங்க ஜெயிச்சிருக்கலாம்’.. ஆனா இதுல எப்பவும் ‘தல’தான் கெத்து.. வெளியான புதிய தகவல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 14, 2019 05:54 PM

ட்விட்டரில் ஐபிஎல் சம்பந்தமாக அதிக அளிவில் ட்வீட் செய்யப்பட்டு வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

IPL 2019 sets new record on Twitter

ஐபிஎல் டி20 தொடரின் 12 -வது சீசன் மார்ச் 23 -தேதி தொடங்கி மே 12 -ம் தேதி வரை கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. பரபரப்பாக நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்து அனைத்து அணிகளும் தங்களது அணி குறித்த அறிவிப்புகளை ட்விட்டரில் பதிவிட்ட வண்ணம் இருந்தன. தற்போது ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டு மொத்தமாக 27 மில்லியன் ட்வீட்கள் ஐபிஎல் தொடர்பாக செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 44 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தோனியுடன் இருக்கும் புகைப்படத்துடன், ‘தோனி என்னுடைய இன்ஸ்பரேஷன், நண்பர்,  சகோதரர், லெஜண்ட்’ என பதிவிட்ட ட்வீட் இன்றுவரை 16 ஆயிரத்துக்கும் மேலானோரால் ரீ-ட்வீட் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இதனை அடுத்து இந்த சீசனில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஹர்பஜன் சிங் மற்றும் ரசலை விட சென்னை அணியின் கேப்டன் தோனியை ட்விட்டரில் அதிகம் பேர் ட்வீட் செய்துள்ளனர். அதேபோல் மற்ற அணிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அதிகம் பேரால் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

Tags : #IPL #IPL2019 #CSK #MSDHONI #WHISTLEPODU #YELLOVE