'அப்போ,இந்த வியாபாரம் தான் ஓடிட்டு இருக்கு'... சிக்கிட்டாண்டா சேகரு...'வெச்சு செஞ்ச ரசிகர்கள்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | May 13, 2019 12:55 PM

ஐபிஎல் 12வது சீஸனின் இறுதி ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை தட்டி சென்றது.இது சென்னை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

Sanjay Manjrekar Trolled For Advising Mumbai Indians From Commentary

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் மோதிய பரபரப்பான இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.இந்த போட்டியில் 4-ஆவது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி.மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.இதனிடையே நேற்றைய போட்டியில் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ரேக்கரின் செயல் சென்னை ரசிகர்களை வெகுவாக கடுப்பேற்றியது.

சஞ்சய் ஐபிஎல் இறுதி போட்டியை வர்ணனை செய்யவந்தாரா அல்லது மும்பை அணியை உற்சாகப்படுத்த வந்தாரா என பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இதனால் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போதே ரசிகர்கள் மீம்ஸ்களை தெறிக்க விட்டார்கள்.வர்ணனையாளர் அறையில்,யாரோ மும்பை அணியின் தீவிர ரசிகர் ஒருவர் மைக்குடன் அமர்ந்திருக்கிறார் என கலாய்த்து தள்ளினார்கள்.சஞ்சய் வர்ணனையாளரா? அல்லது மும்பை அணியின் பயிற்சியாளரா என கேட்கும் அளவிற்கு அவரது நடவடிக்கைகள் இருந்தன.

குறிப்பாக மும்பையின் தொடக்க ஆட்டக்காரர் டி காக் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது,சஞ்சய் பல நுணுக்கங்களை கூறிக்கொண்டு இருந்தார்.இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.சஞ்சய் மஞ்ரேக்கர்,ஏன் வர்ணனையாளர் என்ற போர்வையில் இந்த செயலை செய்ய வேண்டும்.நேரடியாக மும்பை வீரர்களோடு அமர்ந்து கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தலாமே என.ரசிகர்கள் பலரும் கடுமையாக பதிவிட்டனர்.

வரும் காலங்களில் எல்லா அணிகளுக்கும் பொதுவான ஒருவரை வர்ணனையாளராக அமர்த்த வேண்டுமே தவிர,குறிப்பிட்ட அணியின் ஆதரவாளர்களை அனுமதிக்க கூடாது என பலரும் ட்வீட் செய்தனர்.

Tags : #IPL #IPL2019 #CHENNAI-SUPER-KINGS #CSK #MUMBAI-INDIANS #TWITTER #SANJAY MANJREKAR #IPL 2019 FINAL