‘இது மட்டும் நடக்காம இருந்திருந்தா’.. பரபரப்பான போட்டியை மாற்றிய தோனியின் ரன் அவுட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | May 13, 2019 12:04 AM
மும்பைக்கு எதிரான இறுதிப்போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி நூலிழையில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

ஐபிஎல் டி20 தொடரின் 12 -வது சீசனின் இறுதிப்போட்டி இன்று(12.05.2019) ஹைதராபாத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்டை நடத்தின.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதில் தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் டி காக் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி சென்னை அணி பந்துவீச்சாளருக்கு நெருக்கடியை கொடுத்தனர். இதனை அடுத்து சர்துல் தாக்கூர் ஓவரில் டி காக்கும், தீபக் ஷகர் ஓவரில் ரோஹித் ஷர்மாவும் அடுத்தடுத்து அவுட்டாகினர். 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக பொல்லார்ட் 41 ரன்கள் அடித்தார்.
இதனைத் தொடர்ந்து விளையாடிய சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியடைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டு பிளிஸிஸ் மற்றும் வாட்சன் அதிரடியாக விளையாடினர். இதில், டு பிளிஸிஸ் 26 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ரெய்னா மற்றும் அம்பட்டி ராயுடு அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனை அடுத்து வந்த கேப்டன் தோனி ஓவர் த்ரோவில் ரன் எடுக்க ஓடி நூலிழையில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
Ms Dhoni Run Out in IPL 2019 Final #IPL2019Final #MsDhoni https://t.co/fOzpiLni8Y
— Vikash Gaur (@thevikashgaur) May 12, 2019
