'ஒரு பொண்ணு ட்ரெண்டானா'... 'அது என்ன குத்தமா'?... அதுக்காக 'இப்படியா பண்ணுவீங்க'?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | May 14, 2019 02:46 PM
நடப்பு ஐபிஎல் தொடரின் போது பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆர்.சி.பி - ஹைதராபாத் அணிகள் மோதின.பெங்களூரு அணி இந்தப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆனால் பெங்களூரு அணியின் வெற்றியை விட அதிகமாக பேசப்பட்டவர்,கேமிராவில் சில வினாடிகள் காண்பிக்கப்பட்ட சிகப்பு பனியன் அணிந்த பெண்.போட்டியின் போது பெங்களூரு அணியை உற்சாகப்படுத்த அவர் செய்த செயல்கள் மிகவும் வைரலாகியது.
இதனிடையே ஒரே போட்டியில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.ஒரே நாளில் லட்சகணக்கான இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களைப் பெற்றார். #theRCBgirl என்ற ஹஸ்டேக்கில் இவரது புகைப்படங்கள், வீடியோக்கள் இணையம் முழுவதும் வைரலாகி தலைப்புச் செய்தியாக மாறினார். ஆனால் தற்போது இதுவே இவருக்கு தற்போது மிகப்பெரிய தலைவலியாக மாறி உள்ளது.இணையத்தில் சில விஷமிகள் இவரை பற்றி தரைகுறைவாக விமர்சித்து,தகாத கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர்,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அவருடைய பதிவில் “நான் மிகவும் பிரபலமானவர் ஒன்றும் இல்லை. எல்லோரையும் போல் ஒரு சாதாரணப் பெண் தான். கேமரா என்னை பதிவு செய்ய வேண்டுமென்பதற்காக நான் எந்த ஒரு செயலிலும் ஈடுபடவில்லை.சாதாரண ரசிகையாக தான் அவர்கள் என்னை காண்பித்தார்கள்.என்னுடைய பெயர், சுயவிவரங்களை உடனடியாக எப்படி மற்றவர்கள் கண்டுபிடித்தார்கள் என்று எனக்கே குழப்பமாக உள்ளது.
சமூகவலைதளங்கில் என்னை ஃபாலோ செய்யும் சிலர்,மிகவும் தரைகுறைவான வார்த்தைகளால் என்னை திட்டுகிறார்கள்.கேமராவில் இதை எல்லாம் செய்தால் பிரபலமாகலாம் என எதையும் நான் செய்யவில்லை. ஒரு பெண் வைரலானால் இவ்வாறு தான் நடந்து கொள்வார்களா''? என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.