“ஐபிஎல் கோப்பையுடன் உற்சாகமாக வீதியில் உலா வந்த வீரர்கள்”!.. ‘ஆர்ப்பரித்த ரசிகர்கள்’!.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | May 14, 2019 02:46 PM
12 வது ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்று கோப்பையுடன் மும்பை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

12 வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில், ஹதராபாத்தில் இருந்து மும்பை வந்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு மும்பை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மும்பையின் முக்கிய சாலையில் 6 கிமீ தூரம் ரசிகர்களின் கூட்டத்துக்கு நடுவே ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற கோப்பையுடன் திறந்த பேருந்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் உற்சாகமாக ஊர்வலம் வந்தனர். அப்போது, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் வீரர்களை நோக்கி உற்சாக முழக்கமிட்டனர்.
📹: 🚎 CH4MPIONS ARE 🏠 💙#OneFamily #CricketMeriJaan #MumbaiIndians pic.twitter.com/CrtcXS4M1P
— Mumbai Indians (@mipaltan) May 13, 2019
