'எனக்கே விபூதி அடிக்க பாத்தில்ல' ... நச்சுன்னு பதிலடி கொடுத்த 'தல' ... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | May 13, 2019 04:27 PM

அடுத்த ஐபிஎல் போட்டிகளில் பார்க்கலாமா என சஞ்சய் மஞ்சுரேக்கர் கேட்டதற்கு,தோனி அளித்த சாதுரியமான பதில் பலரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.இவருக்கெல்லம் இப்படி தான் பதில் கூற வேன்டும் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Sanjay Manjrekar Gets One Cheeky Reply From Dhoni Himself

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்த இந்த போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-ஆவது முறையாக மும்பை கோப்பையை வென்றது. சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தோல்விக்கு பின் தோனி பேசிய வார்த்தைகள் மற்றும் சஞ்சய் மஞ்சுரேக்கர் கேட்ட கேள்வி தான் தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிகாக ஓடி கொண்டிருக்கிறது.அப்போது பேசிய தோனி ''ஒரு அணியாக இந்த தொடர் முழுவதும் எங்களுக்கு சிறப்பான ஒன்றகவே அமைந்தது.ஆனால் அதில் சில குறைபாடுகளும் இருக்கிறது.மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை,என தெரிவித்தார்.

அப்போது 'அடுத்த ஐபிஎல் போட்டிகளில் பார்க்கலாமா'? என சஞ்சய் மஞ்சுரேக்கர் கேள்வி எழுப்பினார்.அதற்கு தோனி 'அடுத்த ஆண்டிற்கான திட்டம் குறித்து தற்போது  முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை.அதற்கு நேரம் இருக்கிறது.அடுத்து முக்கியமாக உலகக்கோப்பை இருக்கிறது.அதில் தான் என்னுடைய கவனம் இருக்கிறது.இருந்தாலும் நம்பிக்கை இருக்கிறது பார்க்கலாம் என தெரிவித்தார்.

இதனிடையே சஞ்சய் கேட்ட கேள்விக்காகவும்,போட்டிக்கு பின்பு அவர் போட்ட ட்விட்டிற்காகவும் அவரை பலமாக கலாய்த்து வருகிறார்கள்.அவருடைய ட்விட்டில் ''போட்டி முடிந்து தோனி பேசிய போது என்னுடைய இதயம் நொறுங்கிவிட்டது.  தோனியை இதற்கு முன்பு நான் இப்படி பார்த்ததே இல்லை என பதிவிட்டிருந்தார். அதற்கு ரசிகர்கள் பலரும் உங்களின் அனுதாபம் ஒன்றும் எங்களுக்கு தேவையில்லை.தோனி தன்னுடைய பதில் மூலமாகவே உங்களின் மூக்கை உடைத்து விட்டார் என பதிவிட்டுள்ளார்கள்.

Tags : #IPL #IPL2019 #CSK #CHENNAI-SUPER-KINGS #MUMBAI-INDIANS #MSDHONI #SANJAY MANJREKAR #IPL 2019 FINAL